வெள்ளவத்தையை சேர்ந்த இருவர் பெருந்தொகை பணத்துடன் கைது
பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளவத்தை - கிருலப்பனை பகுதியை சேர்ந்த 49 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சோதனை நடவடிக்கை
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், சோதனை நடவடிக்கையில் கிருலப்பனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 5,745,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அப்பகுதியில் எரிவாயு கடை நடத்தி வருகிறார்.
பெருந்தொகை பணம்
மேலும் அவர் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பணம் தூய்மையாக்கல் உதவியதற்காக மற்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களில் ஒருவரின் வசம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது கடை நடத்துவதன் மூலம் கிடைத்த வருமானமா என்பது தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
