அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் நாடு கடும் நெருக்கடியில்! முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு
தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(21.10.2026)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "எரிபொருள் விநியோகத்துக்காக கியூ.ஆர். குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எரிபொருள் அற்ற நிரப்பு நிலையங்களையும் நீண்ட வரிசைகளையும் இன்றும் பரவலாகக் காண முடிகின்றது.
கடும் பாதிப்பு
மேலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதால், தோட்டப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவு சார்ந்த உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆற்றல் நெருக்கடிக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கத் தவறிய அரசு, மக்களின் பட்டினியை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படுகின்றது.
அந்நிய முதலீடுகள்
நேரடியாக அந்நிய முதலீடுகள் நாட்டுக்கு வருவதாக அரசு கூறினாலும், கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்திருந்த சீன முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைக் கைவிட்டு வெளியேறி வருகின்றனர்.இதன் காரணமாக அவர்களுக்கு டொலர்களில் நஷ்டஈடு செலுத்த வேண்டிய அவலநிலையும் உருவாகியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்ச சூழல் காரணமாக, மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு மக்கள் போராட்டம் (அரகலய) வெடிப்பதற்கான அபாயம் காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடி அமைச்சர் மீது மீனவ சங்கங்களின் கூட்டிணைவு மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு