தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது! பிரபு எம்.பி
மக்கள் சக்தி எம்மோடு இணைந்து இருக்கும் வரை கடந்த கால ஆட்சியாளர்களால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(28.11.2026)நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஆட்சி அமைத்து மக்களால் விரட்டியடிக்கப் பட்டவர்கள் இந்த அரசியல் அதிகாரத்தை தாம் எங்களுக்கு வழங்கியதாக தற்போது ஒரு கருத்தியலை முன்வைத்து வருகின்றனர்.
மோசடி
கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை எந்த நிலைக்கு விட்டுச் சென்றுள்ளானர் என்பது பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன என்றும் மக்களுக்காக என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தீர்கள், ஏன் மக்கள் உங்களை விரட்டியடித்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பின்வாசலால் ஓடிய ஜனாதிபதி கடந்த காலங்களில் இருந்து இருக்கின்றார்கள். அவர்கள் நாட்டை சீரழித்து நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு எங்களுக்கு தந்திருந்தார்கள்.
அரச கஜானாக்களை இல்லாமலாக்கி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குற்ற செயல்களோடு சம்பந்தப்பட்டவர்கள்தான் கடந்த காலங்களில் அரசியல் பயணங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
அரசியல் அதிகாரம்
எமது அரசாங்கத்தின் ஊடாக நாம் தற்போது ஊழலை இல்லாத செய்திருக்கின்றோம். வீண்விரயங்களை தடுத்து மக்களுக்கு தேவையான விடயங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

அரசியல் அதிகாரம் மக்களால் தீர்மானிக்கப்படும் வரை எதிர்க்கட்சியினரால் ஒன்றும் செய்துவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு! அரச ஊழியர்கள் - ஆசிரியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு