சில பௌத்த பிக்குகளின் கருத்துக்களை கவனத்திற்கொள்வதில்லை – விஜித ஹேரத்
சில பெளத்த பிக்குகளின் கருத்துக்களை கவனத்திற் கொள்ளப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சில குறுகிய நோக்கங்களுடன் செயல்படும் சிறிய தொகை பிக்குகள் பல்வேறு கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான விடயங்களை அரசு அதிகமாக கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
[A3SVGK ]
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாக, பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காக மிக உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாக நாம் பௌத்த சாசனத்தின் சீர்திருத்தமும் நிலைத்தன்மையும் உறுதி செய்ய மிக உயர்ந்த அளவில் செயல்படுகிறோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புனித தந்த தாது பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமீபத்தில் புத்தரின் புனித பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவந்து, இந்த நாட்டின் பௌத்த சமயத்தினருக்கு வணங்கி வழிபட வாய்ப்பு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், விகாரைகள் மற்றும் கோவில்களில் உள்ள பிக்குகளின் நலன்கள் தொடர்பாக அரசு விரிவான தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்திலும் பிக்குகளின் பெற்றோருக்கு வீடுகள் அமைத்து வழங்கும் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் பௌத்த கொள்கைகளுக்கும் பௌத்த சமயத்திற்கும் அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது.
குறுகிய நோக்கங்களுடன் செயல்படும் சிலர் மேற்கொள்ளும் செயல்களை அரசு அதிகமாக பொருட்படுத்தவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri