உலக சந்தையில் விலை குறைந்தும் எரிபொருள் விலையை அதிகரித்த இலங்கை அரசாங்கம்
நாட்டு மக்களுக்கு வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதாகவும், எரிபொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள விலை..
கடந்த வாரத்தில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 12 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
உலக சந்தையின் எரிபொருள் விலை மாற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் விலைகளை நிர்ணயம் செய்யும் நோக்கில் விலைப்பொறிமுறையை கடந்த அரசாங்கம் அறிமுகம் செய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79.27 டொலர்களாக காணப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 68.13 டொலர்களாக வீழ்ச்சியடைந்தது என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 66.36 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரசபை மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் ஆட்சி பொறுப்பினை ஏற்றதுடன் ஊழலை இல்லாதொழித்து மின் கட்டணத்தை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரசாரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்தியுள்ளது என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
