வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவர்! அதிகாரத்தை கைப்பற்றிய NPP
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிந்தக ஹேவாபதிரண தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கான வாக்கெடுப்புக்கு இன்று(2026.02.02) இடம்பெற்றுள்ளது.
புதிய தலைவர்
குறித்த வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதன்படி, அந்த பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 1 வாக்கு பெரும்பான்மையால் அதிகாரத்தை வென்றுள்ளது.

வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர, ஒக்டோபர் 22 ஆம் திகதி பிரதேச சபைத் தலைவர் அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் பிரதேச சபைத் தலைவர் பதவி வெற்றிடமாக இருந்தநிலையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட புதிய வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி அந்தப் பதவியைப் பெற்றுள்ளது.