தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்கிடையே கலந்துரையாடல்
நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்று (17.10.2024) வியாழக்கிழமை வவுனியா தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்தவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், மாவட்ட மற்றும் பிரதேச கட்டமைப்புக்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்தநிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டதுடன், வன்னி மாவட்ட வேட்பாளர்கள், உறுப்பினர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
