நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு தமிழ் மக்கள் ஓய்வை வழங்கவேண்டும்..!
கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று (17) இடம்பெற்றது.
தென்னிலங்கை மக்கள்
இதன்போது கருத்து தெரிவித்த வி.மணிவண்ணன், "எதிர்வரும் தேர்தலானது நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படும் நேரத்தில் வரும் தேர்தலாக காணப்படுகிறது.
இதுவரை காலமும் மக்களால் கருத்தில் எடுக்கப்படாத தேசிய மக்கள் சக்தி என அழைக்கப்படும் ஜே.வி.பி. தென்னிலங்கையில் தனது ஆதரவை பெருக்கி ஆட்சியமைத்திருக்கிறார்கள். அதன் ஊடாக தென்னிலங்கை மக்கள் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.
நாட்டை பழுதாக்கிய பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து புதிய நேர்மையான ஆட்சியாளர்களையும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க வேண்டும் என்ற செய்தியை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தெற்கில் பல மூத்த அரசியல் தலைவர்கள் போட்டியிடுவதில் இருந்து விலகியிருக்கிறார்கள். ஆனால் வடக்கு - கிழக்கில் இன்னமும் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கையில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |