நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சிக்கு கட்சி வழங்கிய ஆலோசனை
தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாம் என அலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை, கிம்பத பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கிளீன் சிறிலங்கா திட்டத்ததின் போது ஊடகவியலாளர்கள் கொட்டச்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆலோசனை
இதன்போது கட்சியின் ஆலோசனைக்கு அமைய தம்மால் கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக வருந்துவதாகவும் நிலாந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நிலாந்தி கொட்டச்சி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்டு எடுக்கப் போவதாகவும் நிலாந்தி தேர்தல் மேடைகளில் கூறியிருந்தார்.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
