அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது
அரசாங்கம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாமால் ராஜபக்சவின் சுதந்திரம் மிகவும் இழிவான முறையில் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் ஓர் வருத்தப்பட வேண்டிய ஓர் நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் ஓருவருக்குக் கூட மூன்று மாதங்களின் பின்னர் பிணை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கும் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவும் பிணை பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் செயற்பாடு மிக்க தலைவரான நாமல் ராஜபக்சவிற்கு மட்டும் அந்த உரிமை வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அனைத்து விடயங்களின் மூலமும் அரசாங்கம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தால் எதிர்கால சந்தததியினரின் நிலைமை குறித்து கேள்வி எழுவதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.