13 ஆண்டுகளின் பின் மீண்டும் அதே அரசியல் பாதை - டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்... தமிழ்நாட்டில் விஜய்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கட்சி அடைந்துள்ள வெற்றியும், 2013ஆம் அண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள வெற்றியும் ஒத்துப் போகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோர விஜய் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012இல் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி
இன்னொரு பக்கம் ஜோன் ஆரோக்கியசாமி மூலமாக காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் ஆதரவை கோருவார் என்று சொல்லப்படுகிறது.
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தவெக அடைந்துள்ள வெற்றி, அப்படியே 2013ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள வெற்றியை ஒத்து இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், 2012ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்.
ஆம் ஆத்மி என்றால் சாமானிய மக்கள் என்று பொருள். அது டெல்லியில் சாமானிய மக்களிடையே பிரபலமானது. அந்தக் கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் ஊழலை துடைப்பம் கொண்டு ஒழிப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
13 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சி
சரியாக 2013ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 28 பேர் வெற்றி பெற்றனர்.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 13 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், துடைப்பத்தால் துடைத்து எடுக்கப்பட்டது.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி அரியணை ஏறியது.

ஆனால் அந்த ஆட்சி 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. ஆட்சியை கலைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்தலை சந்தித்து 67 இடங்களில் வெற்றி பெற்றார்.
அதேபோல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தான் தவெக என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். மொத்தமாக 2 மாநாடு, 28 பிரசாரக் கூட்டங்களை மட்டுமே விஜய் நடத்தினார்.
இன்னொரு பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால் போல் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வேறொரு கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதனால் வரும் நாட்களில் விஜய்யின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலை போலவே விஜய்யின் பாதையும் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.