நாடு கடத்தப்படுகிறார் பிரபல டென்னிஸ் வீரர்?
அவுஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டிகளுக்கு முன்னதாக முதன்மை வீரர், நோவக் ஜோகோவிச்சின் விசாவை அவுஸ்திரேலிய குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke) ரத்து செய்துள்ளார்.
ஜோகோவிச்சின் விசாவை ரத்துச்செய்வதற்காக தமது அமைச்சர் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான முடிவை அலெக்ஸ் அறிவித்தார்.
இந்த முடிவை எடுப்பதில், உள்துறை அமைச்சகம், அவுஸ்திரேலிய எல்லைப் படை மற்றும் ஜோகோவிச் தமக்கு வழங்கிய தகவலை கவனமாக பரிசீலித்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட ஜோகோவிச், நீதிமன்றம் சென்ற நிலையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும் பயண ஆவணங்களில் 'நிர்வாகத் தவறை' நோவக் ஜோகோவிச் ஏற்றுக்கொண்டார்.
வீசா ரத்துச்செய்யப்பட்டதை அடுத்து ஜோகோவிச் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
"கொரோனா தொற்றுநோய்களின் போது அவுஸ்திரேலியர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர். அந்த தியாகங்களின் விளைவு பாதுகாக்கப்படும் வகையிலேயே ஜோகோவிச்சின் வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் அலேக்ஸ் ஹாக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலிய திறந்தநிலையில் டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பிக்கின்றன.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri