சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமையில் மாற்றம்
சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கான கல்வித் தகைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனை க.பொ.த சாதாரண தரமாக குறைக்கப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கடந்த நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மூன்று உயர்தரப் பாடங்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த விதியை திருத்தியமைத்து, கடந்த 13ஆம் திகதி மற்றுமொரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட நீதித்துறை அமைச்சர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேல் இல்லாது ஆறு பாடங்களில் C தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
மற்றுமொரு முறை
அப்படியிருந்தும், ஒருவருக்கு அந்தத் தகுதி இல்லாவிட்டாலும், ஒரு புகழ்பெற்ற மதத் தலைவரோ அல்லது ஒரு சங்கத் தலைவரோ அவர் சமூகத்திற்குச் செய்யும் முன்மாதிரியான சேவையைக் கருத்தில் கொண்டு சமாதான நீதியரசராக நியமிக்கத் தகுதியானவர் என்று பரிந்துரைத்தால், நீதி அமைச்சர் பரிசீலித்து அந்த நபரை சமாதான நீதிபதியாக நியமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
