வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
இதனையடுத்து 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்,மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்புகளை பாதிக்கும் வகையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் திட்டத்தின் படி நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
