வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விண்ணப்பப்படிவம் போலியானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
கொரிய அரசாங்கத்தினால் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான விண்ணப்ப படிவங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பப்படிவங்கள் பதிவிறக்கம்
இந்த ஆண்டு கொரிய மொழி பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களில் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதம் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |