இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
162,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி இந்த ஏல விற்பனை நடைபெறவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏல விற்பனை
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன? 9 நிமிடங்கள் முன்

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
