இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அறிவிப்பு
இதற்கமைய சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, உரிய பணிப்புரைகள் இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகளுக்கான பணிப்புரை

இதேவேளை நேற்று(01.10.2022) முதல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலுவை வைப்பு மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் வர்த்தக வங்கிகள் பணிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நிலையான வைப்பாளர்களுக்கு 14.5 சதவீதமான வட்டி வழங்கப்பட்டுள்ள நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15 சதவீத வட்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam