இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 2771 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தாதியர், விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
அதன்படி, தாதியர் தொழிலுக்கு 409 பேரும், கட்டுமானத் துறைக்கு 804 பேரும், விவசாயத் துறைக்கு 1558 பேரும் தெரிவாகியுள்ளனர்.
இலங்கையர்களுக்கு தொழில் வெற்றிடம்
மேலும், மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் மேலும் 172 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத்துறையில் உள்ள தொழில் வெற்றிடங்களுக்காக செல்ல உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு 1912 இலங்கையர்கள் மாத்திரமே இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளனர்,
இதன்படி இந்த வருடம் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக பணியகம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
