மாகாணம் விட்டு மாகாணம் செல்லும்போது கட்டாயமாக்கப்படும் நடைமுறை? அரசுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை
மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டதனை உறுதி செய்யும் அட்டையை அருகில் வைத்திருப்பது கட்டாயம் என அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன்வைப்பதாக ராகம வைத்திய பீடத்தின் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா(Arjuna De Silva) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாகாணம் விட்டு மாகாணம் செல்லும்போது பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் எனவும், குறிப்பாக இதன்மூலம் இளைஞர்களை தடுப்பூசி பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உலகின் பிற பாகங்களுக்கு செல்வதற்கு தற்போது தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனவும் அர்ஜூன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.