சமையல் எரிவாயு தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நுகர்வோருக்கு விநியோகித்த வெற்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்ற லாப்கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக லப்கேஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை, விநியோகிக்கும் பணிகள் இயல்பாவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri