எங்களால் எதுவும் செய்ய முடியாது! எரிபொருள் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கான அவசர அறிவிப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ கூறுகையில், எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும், இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது.
பிரச்சினைகள்
QR குறியீடு தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாருங்கள்.

கடந்த சில தினங்களில் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கியிருந்தோம். ஆனால், இனிமேல் QR குறியீட்டிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும்.
அவசரத் தேவை ஏற்பட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறொருவரின் வாகனத்தில் செல்லுமாறே கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
You may like this..
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan