வெளிநாடு செல்ல காத்திருக்கும் பெண்களுக்கு விதிக்கப்படும் தடை! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
சிறு குழந்தைகளுடைய தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதனால் சமூகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், இலங்கையிலுள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சின் சுற்றறிக்கை
0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாயின் கவனிப்பின்றி வளர்வதனால் எதிர்வரும் 20-25 வருடங்களில் சமூக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சம்பந்தப்பட்ட குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 02/2023 இன் படி, 02 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குழந்தை தாய்ப்பாலைப் பெறும் திறனை இழக்கின்றதுடன், தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் பாசமும் இழக்கப்படுகிறது என்றும் குழு வலியுறுத்தியுள்ளது.
விதிமுறைகள்
மேலும், குழந்தைகள் தகுந்த பராமரிப்பின்றி வளர்வதால் குழந்தைகள் எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் பிற குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை உள்ளது. அவர்கள் வேறு ஒருவரின் பராமரிப்பில் இருப்பதால், அவர்கள் அண்டை வீட்டாரால் மட்டுமல்ல, அவர்களின் தந்தை, தாத்தா போன்ற நெருங்கிய உறவினர்களாலும் துன்புறுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்ட இலங்கையில் உள்ள சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
