அசோக அபேசிங்கவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றில் வெளியிட்ட தகவல் தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியதாகவும் இதற்கு பணத்தை செலவிட்டவர் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி எனவும் அசோக அபேசிங்க குறித்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7