அரசாங்கத்திற்கு மற்றுமொரு தோல்வி - முக்கிய தடையை நீக்கியதாக அறிவிப்பு (Video)
இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட போதும், தனியார் துறையினரின் அழுத்தம் காரணமாக அதனை நீக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
