நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமையை அம்பலப்படுத்த முடியாது என அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவது அந்தரங்க உரிமையை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகமொன்று தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகளை அறிந்து கொள்ள முயற்சித்திருந்தது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமையானது அவர்களின் அந்தரங்க உரிமை எனவும், இது பொது விவகாரம் கிடையாது எனவும் நாடாளுமன்றின் துணை செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு கல்வித் தகமை ஓர் அடிப்படை கிடையாது எனவும் வாக்காளராக இருந்தால் மட்டும் போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam