பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களுக்கு இன்று (27) முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீள்திருத்தம்
இதன்படி, விண்ணப்பங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற, 2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வியாழக்கிழமை(23.01.2025)வெளியாகின.
பெறுபேறுகள்
இந்த பரீட்சையில், 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

மேலும், இந்த பரீட்சை வினாத்தாளில் 3 வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலைகள் ஏற்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகளிலும் இது பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்த நிலையில், பல்வேறு சர்ச்சை மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் பரீட்சை மதிப்பீடுகள் நடத்தப்பட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri