தேர்தலுக்கு பின்னரான காலம் குறித்து வெளியான அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பின்னரான காலம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ (Nihal Thalduwa), தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு
தற்போது தேர்தலுக்குப் பின்னரான காலம் ஆரம்பிப்பதுடன் ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.

எனவே, இந்த காலகட்டத்தில் பொலிஸார் நாடு முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri