வவுனியா மக்களுக்கான அறிவிப்பு (Photos)
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் நகரசபை ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பிடிக்கப்பட்டு நகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே உரியவர்கள் கால்நடைகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள்
வவுனியா நகரில் வீதிகளில் கைவிடப்பட்ட கால் நடைகளினால் அதிகளவு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வீதி விபத்துக்களில் அதிகமான விபத்துக்கள் கைவிடப்பட்ட கால் நடைகளினால் ஏற்படுகின்றது.
எனவே இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் நகரசபை ஊழியர்கள் இணைந்து மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கட்டாக்காலி கால்நடைகள்
இந்நிலையில் இன்று (11) அதிகாலை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் இலங்கேஸ்வரன் தலைமையில் சென்ற நகரசபை ஊழியர்கள், பொலிஸாருடன் இணைந்து மூன்று முறிப்பு, மன்னார் வீதி, பூந்தோட்டம், ஹொறவப்பொத்தான ஆகிய நகரசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் காணப்பட்ட சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை பிடித்து நகரசபையிடம் ஒப்படைத்துள்ளனர்.
கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றின் அடையாளங்களை உறுதிப்படுத்தி தண்டப்பணத்தை
செலுத்தி பெற்றுக்கொள்ளவும் அவ்வாறு பெற்றுக்கொள்ளத் தவறினால் அவற்றை ஏல
விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
