பேருந்து கட்டணங்கள் பற்றி போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்போதைக்கு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டால் பஸ் உரிமையாளர்கள் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்து கட்டணங்களை அதிகரிக்கும் உத்தேசமோ அல்லது டீசலின் விலையை அதிகரிக்கும் உத்தேசமோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு டீசலின் விலை உயர்ந்தால் அந்த நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த தடவை டீசல் விலை உயர்த்தப்பட்ட போது பேருந்து உரிமையாளர்களுடன் பேசி விலை அதிகரிப்பு செய்வதனை தவிர்த்திருந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
