அவசர வழக்குகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டின் கோவிட் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அவசர வழக்குகளை மட்டும் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கும் முடிவைச் செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற பதிவாளர், பிரதம நீதியரசரின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோவிட் தொற்றுநோயால் வரையறுக்கப்பட்ட பணியாளர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஏதேனும் அவசர வழக்குகள் இருந்தால், அதற்கான விண்ணப்பம் அடங்கிய பிரேரணை திட்டமிடப்பட்ட திகதிக்கு முதல் நாள் அல்லது அது முடியாவிட்டால், திட்டமிடப்பட்ட திகதி முற்பகல் 9.30 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில்,கோவிட் பரவுவதைத் தடுப்பது தொடர்பாகச் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு அனைத்து சட்டத்தரணிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றிலும், செப்டெம்பர் 3 வரை அவசர வழக்குகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
