வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வீட்டுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சகல பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை வரை சகல பிரதேச செயலகங்களிலும் பயனாளிகள் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை உள்ளவர்கள் எழுத்து மூலம் எதிர்வரும் 16. ம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முறைப்பாட்டாளர்களின் கோரிக்கைக்குப் பிரதேச செயலகத்தால் எழுத்து மூலம் காரணம் தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் ஏதும் நிகழுமானால் அதனைச் சரிசெய்து 19ஆம் திகதி இறுதிப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும். பயனாளிகளுக்கு எழுத்துமூலம் தெளிவுகள் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
அதன் பின்னரும் பயனாளி தனக்கு ஏதாவது ஆட்சேபனை இருப்பின் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு விவரங்களை அனுப்பி வைத்தால் கருத்தில் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
