துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் 2022 அக்டோபர் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை தங்கள் உரிமங்களை புதுப்பிக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு
டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று தெரிவித்துள்ள அமைச்சகம், சரியான உரிமம் இல்லாதவர்களுக்கு துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவின் படி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
துப்பாக்கி உரிமங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.defence.lk இல் கிடைக்கும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


இலங்கையின் முதல் கரிநாள்...! 36 நிமிடங்கள் முன்

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
