அடிப்படை விடயம் கூட தெரியாமல் பொதுவெளியில் பொய்யுரைக்கும் சாணக்கியன்: தேவராஜன் விசனம்
அரசாங்க அதிகாரியினால் மதுபானசாலை திறப்பதற்கான அனுமதி பெறமுடியாது என்ற அடிப்படை விடயம் கூட தெரியாமல் பொதுவெளியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர், ஆறுமுகம் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (21.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு தனது பெயரை தொடர்புபடுத்தியும், சமூக ஊடகங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டும் மக்கள் மத்தியில் வேண்டுமென்றே களங்கத்தை விளைவிக்க இரா.சாணக்கியன் முயற்சி செய்துள்ளார்.
வேதனைக்குரிய விடயம்
அவருக்குரிய சிறப்புரிமை பாவித்து எனது அடிப்படை உரிமையை மீறி கருத்துக்கள் தெரிவித்துள்ளமையானது, சமூக செயல்களில் ஈடுபட்டு வரும் எனக்கு மிகவும் வேதனை அளிப்பதுடன், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகப் பிரிவில் தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் இதனை பொய்யென உறுதிப்படுத்தி உள்ளேன்.
இதனை உறுதிப்படுத்தாது அவர் பொதுவெளியில் தெரிவித்துள்ள விடயமானது வேண்டுமென்றே எமது இராஜாங்க அமைச்சரையும் களங்கப்படுத்துவதற்காகவே.
நான் தமிழரசு கட்சிக்காரர்களை மிகவும் மரியாதையுடன் அணுகுபவன். மாவட்டத்தில் புதிதாக வரும் மதுபானசாலைகள் திறப்பதை தடுக்கவேண்டும். அது மிகவும் சிறந்த விடயம்.
புதிய மதுபான சாலையை யார் திறக்க அனுமதி கோரி உள்ளார் என்பது
அவர்களுக்கு நன்கு தெரியும். அதனை மறைப்பதற்காகவே சமூகத்தை பாதிக்கும் இவ்வாறான
செயல்களில் என்னை சம்பந்தப்படுத்தியுள்ளனர்.
மக்களுக்காகச் செயற்படுங்கள்
இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மக்களுக்கு செய்கின்ற நற்காரியங்களை பொறுத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே இவ்வாறான இழிவான வேலையை முன்னெடுக்கின்றார்கள். இதனை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
தேர்தல் காலங்களில் மக்கள் உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மனதில் வைத்து அவர்களுக்காக செயல்படுங்கள்.
ஒரு அரசாங்க அதிகாரியினால் மதுபானசாலை திறப்பதற்கான அனுமதி பெறமுடியாது என்ற அடிப்படை விடயம்கூட தெரியாமல் பொதுவெளியில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.
அங்கு அனுமதி கோரி இருப்பவர் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராக இருக்கலாம். இந்த மதுபானசாலை அனுமதிக்கும் எனக்கும் எதிர்வித தொடர்பும் இல்லை.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
