பசில் நாடாளுமன்றம் வந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை! - குமார வெல்கம
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குத் திரும்பினாலும், ஒரு வளமான நாட்டை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“2010-15ம் ஆண்டில் முந்தைய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச இருந்ததாகவும், அந்த அரசாங்கத்தில் அவர் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதாகவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திலும் பசில் ராஜபக்ச பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.
எனினும், அன்றிலிருந்து அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் குமார வெல்கம கேள்வியெழுப்பியுள்ளார்.
பசில் ராஜபக்ச திரும்பி வந்தால், நாட்டில் ஒன்று அல்லது இரண்டு சொத்துக்கள் விற்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.