நீங்கள் உயர்தரத்திற்கு தெரிவாகவில்லையா? அரசாங்கம் வழங்கும் சிறந்த வாய்ப்பு
2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாது, உயர்தரத்திற்கு தகுதி பெறாத மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி, உயர்தரத்திற்கு பிரவேசிக்க தகுதி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 98000 என கணிப்பிடப்பட்டுள்ளது.
கணித பாடத்தில் தகுதி பெறாது, கணித பாடத்தில் சித்தியை பெற்றுத் தருவதாக கூறி, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களை தவிர, ஏனைய அனைத்து மாணவர்களையும் இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
உயர்தரத்திற்கு தகுதி பெறாத மாணவர்கள், பிரதேச செயலக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் தகுதி, திறமைகளுக்கு அமைய அவர்களுக்கான தொழில் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இரண்டு கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri