மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படத் தயாரில்லை - நாமல் ராஜபக்ச
40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் எதிரணியில் அமரத் திட்டமிட்டுள்ளேன் என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாமல் ராஜபக்ச தொடர்பில் வெளியாகி வரும் தகவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்மைத் தன்மையற்ற தகவல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "நாமல் ராஜபக்ச தலைமையிலான மொட்டுக் கட்சி குழுவொன்று எதிரணிக்குச் செல்லவுள்ளது எனவும், அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு வியூகம் வகுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் உண்மை தன்மையில்லை. அது மாத்திரமன்றி மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படத் நான் தயாரில்லை.
அடுத்து எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்குத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |