இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தவறாக பயன்படுத்தினார்களா..! டக்ளஸ் குற்றச்சாட்டு

Douglas Devananda Sri Lanka Politician V S Radhakrishnan Sri Lanka Government
By Theepan Apr 22, 2026 01:59 PM GMT
Report

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஸ்ணனுடனான சந்திப்பை தமிழ் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகையும் தமிழ் அரசியல் தரப்பினரது சந்திப்பும் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு ஆடை கும்பல் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரதீப் வலியுறுத்தல்

கறுப்பு ஆடை கும்பல் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரதீப் வலியுறுத்தல்

இந்திய துணை ஜனாதிபதி இலங்கை வருகை

அவர் மேலும் கூறுகையில்,

சில தினங்களுக்கு முன்னர் இந்திய துணை ஜனாதிபதி இலங்கை வந்திருந்த போது அவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கிடையே இருக்கும் குடுமிச் சண்டையை எடுத்துக் கூறி தீர்வு கேட்டதாக இருந்ததே தவிர தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அபிலாசைகளையோ கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கான ஒன்றாக அமையாதது எனக்கும் எமது மக்களுக்கும் வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தவறாக பயன்படுத்தினார்களா..! டக்ளஸ் குற்றச்சாட்டு | Not Properly Use Meeting India Vice President

இன்றைய காலச்சூழலில் இந்திய துணை ஜனாதிபதி இலங்கை வருகை தந்ததானது வரவேற்கத்தக்க ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளை, அவரது வருகையையும் சந்திப்பையும் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் என்னுடைய கவலையாக இருக்கின்றது.

ஏனென்றால், கடந்தகாலத்தில் இவ்வாறு எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும், நாமாகவே சந்தர்ப்பங்களை உருவாக்கியும் எமது மக்கள் தேவைகள் குறித்து நாம் சரியாக கையாண்டிருக்கின்றோம்.

குறிப்பாக, நான் 2010ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்டக் குழுவுடன் இந்தியா சென்றிருந்த போது 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் 500 உழவு இயந்திரம், யாழ் கலாசார மத்திய நிலையம் உள்ளிட்ட அவசிய தேவைகளை பெற்றிருந்ததுடன் 13ஆவது திருத்தச் சட்டமே தீர்வுக்கான ஆரம்பம், ஆனால் அது ஒரு நிரந்தர தீர்வல்ல என்றும் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருந்தேன்.

அவ்வாறாக நாம் முன்னெடுத்த சந்திப்புக்கள் எமது மக்களுக்கு பல வகைகளிலும் நன்மையாகவே அமைந்திருக்கின்றது.

சந்திப்பை தவறாக பயன்படுத்திய தமிழ் தலைவர்கள்

ஆனால் தற்போது இவர்களது இந்த சந்திப்பு என்பது தமக்குள் இருக்கும் குடுமிப்பிடி சண்டையை அவரிடம் சென்று சொல்லி தீர்வுக்காக கலந்துரையாடியது போலவும், அதேநேரத்தில் எமது மக்களுக்கிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அழுத்தமாக கோரிக்கைகளையோ தேவைகளையோ கோரவில்லை என்பதும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

மேலும், இந்தியாவைப் பொறுத்தளவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகவே ஒரு தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பார்கள். அதற்கும் மேல் அவர்கள் போகமாட்டார்கள்.

இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தவறாக பயன்படுத்தினார்களா..! டக்ளஸ் குற்றச்சாட்டு | Not Properly Use Meeting India Vice President

அதனடிப்படையில், அதையாவது இவர்கள் பெற்றுத்தருமாறு எடுத்துரைத்து கேட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் வழமை போன்று தமது சுயலாப அரசியலில் இருந்து கொண்டுதான் இந்தச் சந்திப்பையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

இவர்களது இந்த செயற்பாடானது மக்களை கடுமையாக வேதனையடைய வைத்துள்ளதுடன், குறிப்பாக இவர்களா எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் நோக்கில் இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்திருக்கின்றார்கள் என்றும் சலித்துக்கொள்ள வைத்துள்ளது.

அந்தவகையில், மக்கள் தேவைகள் முன்னிறுத்தப்படாது தமது குடுமிச் சண்டைக்கு தீர்வு கேட்டது போன்ற இந்த சந்திப்பு எனக்கும் வேதனையளிக்கின்றது என்றார்.

இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தவறாக பயன்படுத்தினார்களா..! டக்ளஸ் குற்றச்சாட்டு | Not Properly Use Meeting India Vice President  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை விரைவில் பெற்றுதருமாறு கோரி வெளியிடப்பட்ட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை விரைவில் பெற்றுதருமாறு கோரி வெளியிடப்பட்ட அறிக்கை

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு



மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US