அரசியல் நோக்கத்துக்காக நான் எவரையும் வற்புறுத்துவதில்லை : அமைச்சர் டக்ளஸ்
நான் என்றும் சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகள் தொடரில் ஆராயும் முன்னாயத்தக் கூட்டம் இன்று (24.03.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நலன்
மேலும் குறிப்பிடுகையில், “மக்களுக்காக கிடைக்கின்ற திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த கூட்டம் நடைபெறுகின்றது.

அரச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட நிதி ஒன்றை வழங்க முன்வந்துள்ளார்.
அந்தவகையில், கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை மக்கள் நலனுக்காக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இது திணிப்போ, அரசியல் நோக்குடையதோ அல்ல. நான் சுயநலத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ
திணிப்பதோ கிடையாது. அரசியல் இலாபத்துக்காகவும் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதை விரும்புவதில்லை.
பன்முகப்படுத்தப்பட்ட நிதி
அனைத்தும் மக்களுக்கும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்துதான் இவை பார்க்கப்பட வேண்டும்.
கடந்த 3 வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அது 320 மில்லியனாக எமது மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.

அந்தவகையில் கிடைத்துள்ள இந்த நிதியூடாக மக்களுக்கு உச்சபட்சமான பயன் கிடைக்க செய்வதே எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பதில் அரச அதிபர், மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam