ரணிலின் திட்டத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை: மொட்டு தரப்பு திட்டவட்டம்
தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முற்படுவாராயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறானதொரு நகர்வுக்கு ஒத்துழைத்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமையக்கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடுமையான எதிர்ப்பு
அதேவேளை, தேசிய அரசமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும், தேர்தல் ஆணையம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவுள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் அரங்குகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |