ஞானசார தேரர் உருவாக்கப் போகும் சட்டங்கள் : ஆளும் தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு உருவாக்கும் எந்த சட்டத்திற்கு ஆதரவாகவும் தனது கைகளை உயர்த்த போவதில்லை என ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் (Susil Premjayantha) தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமித்துள்ளமை குறித்து தனது கருத்தை வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டங்களை உருவாக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்திற்கே உள்ளது. வெளி நபர்களுக்கு அந்த உரிமையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சுசில் பிரேமஜயந்த், ஆளும் கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ள சில அமைச்சர்களில் பொலிஸ் அறிக்கைகளை பார்ப்பது சிறந்தது எனக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களுக்கு பொலிஸிலும் நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.