ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்படும்

PeoplesProtestLk EconomicCrisisLk GalleFaceLK RanilWickramasingheLK InfltionLK YouthLk
By Steephen Apr 11, 2022 11:37 AM GMT
Report

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வாழ கூட முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு பதிலளித்து ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு ரணில் விக்ரமசிங்கவின் உரை அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இளைஞர்களின் போராட்டமானது இலங்கையின் தற்போதைய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் புரட்சி. கூடிய கூட்டத்தை பாருங்கள் பாரியளவில் கூடியுள்ளனர். அரசியல் கட்சிகள் அதிகளவில் மக்களை அழைத்து வந்துள்ளனர். அண்மைய காலத்தில் நாம் கண்ட மிகப் பெரிய மக்கள் கூட்டம்.

பேருந்துகள், பார ஊர்திகள் இன்றி ஒரு செய்தி மூலம் இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். எவரும் மது அருந்தி இருக்கவில்லை, சத்தமிடவில்லை. பட்டாசுக கொளுத்தவில்லை. மிகவும் அமைதியாக செய்தி ஒன்றை வழங்க இந்த இடத்திற்கு வந்தனர்.

கண்டியிலும் வேறு இடங்களிலும் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடினர். இளைஞர், யுவதிகள் தமது பலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். நாடாளுமன்றம், அரசியல் கட்சி மற்றும் சிவில் அமைப்புகளுடன் ஒப்பிடும் போது இளைஞர்களின் அணியே முன்நோக்கி வந்துள்ளது.

ஏன் முன்நோக்கி வந்துள்ளனர். ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரினர். இதற்கு வழங்கப்பட்ட பதில் தொடர்பில் அவர்கள் திருப்தியடையவில்லை. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் திருப்தியடையவில்லை. இதனால், இளைஞர், யுவதிகள் தமது பலத்தின் முன்நோக்கி வந்துள்ளனர்.

அனைவரும் இளைஞர்கள். நடுத்தர வகுப்பு மக்களுடன் இந்த எழுச்சி ஆரம்பமானது. எனினும் இளைய தலைமுறையினரே முன்நோக்கி வந்தனர். அவர்களே அடையாளமாக மாறினர்.விவசாயிகள், முச்சக்கர வண்டி ஒட்டுநர்கள், சிறிய வியாபாரங்கள் செய்வோர் மற்றும் அரச ஊழியர்கள் இருக்கின்றனர்.

இளைஞர்கள் தமக்கான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்குமாறு கோருகின்றனர். உங்களால் முடியாது என்றால், நாங்கள் அதனை செய்கிறோம் என என இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலமாக இளைஞர்கள் அரசியல் அதிகாரத்திற்கு செய்தியை வழங்கியுள்ளனர்.

கோட்டா வீட்டுக்கு போங்கள் என்றே இளைஞர்கள் கூறுகின்றனர். கோட்டா இன்னும் வீட்டுக்கு செல்லவில்லை. என்னை மாத்திரமே வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இவை குறித்து சிந்தித்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

புதிய அதிகாரம் மையம் உருவாகியுள்ளது. ஏனைய அதிகார மையங்கள் பலவீனமடைந்துள்ளன. இதனை சம்பிரதாயபூர்வமான அரசியல்வாதிகள் உணர வேண்டும். நாட்டின் என்ன நடக்கின்றது என்பதை உணர வேண்டும். இதனை உணரவில்லை என்றால், எம்மால் முன்நோக்கி செல்ல முடியாது.

அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், வர்த்தக தலைவர்கள், சமய தலைவர்கள் இவர்கள் எவரையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தமக்கான எதிர்காலத்தை கோருகின்றனர். தம்மை பாதுகாத்து தருமாறு நடுத்தர வகுப்பினர் கோருகின்றனர்.

இது பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் மட்டுமே. பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். பண வீக்கம் என்ற பிரச்சினை உடனடியாக தீராது, மேல் நோக்கி சென்றே கீழ் நோக்கி வரும்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலருக்கு வாழவும் கஷ்டம் ஏற்படும். பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டாலும் பிரச்சினைகள் ஏற்படும். மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்தது, இதன் காரணமாக சிறிய வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US