நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேலுக்கு கோவிட் தொற்று உறுதி
நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேலுக்கு கோவிட்- 19 வைரஸ் தொற்று இருப்பது டிக்கோயா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலையின் விசேட மருத்துவர் உபுல் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் தலைவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.
அந்த பரிசோதனை அறிக்கை கிடைக்காத காரணத்தினால், இவர் இன்று டிக்கோயா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.
இந்த பரிசோதனையில் குழந்தைவேலுக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. பிரதேச சபை தலைவரின் குடும்பத்தினர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேச சபை தலைவர் கடந்த சில தினங்களில் நோர்வூட் பகுதியில் திறப்பு விழாக்கள் உட்படப் பல வைபவங்களில் கலந்துகொண்டிருந்தார் என தெரியவருகிறது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan