இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை தளர்த்தியுள்ள நோர்வே அரசாங்கம்
நோர்வே அரசாங்கம் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து பயண அறிவுறுத்தல்களையும் நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது.
மிக அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாக நோர்வே பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
நோர்வே பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்
இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக கடந்த மே மாதம் இந்த பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மருந்துப் பொருள் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டுப் பிரஜைகள் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
