வெளிநாடு சென்று கற்க வேண்டிய அவசியமில்லை!
வரலாற்றுக் காலம் முதல் ஓர் நாட்டின் பலமானது நாட்டின் பௌதீக மற்றும் ஆளணி வளத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது.
பல ஆண்டுகளாகவே இலங்கையிலிருந்து மூளைசாலிகள் கொத்து கொத்தாக நாட்டை விட்டு வெளியேறுவதனை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் இலங்கையில் பல்வேறு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். தொழில் நிமித்தமும், கற்கை நெறிகளுக்காகவும் அநேக புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இலங்கையை பொருத்தமட்டில் அரச பல்கலைக்கழகங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்ற நிலையில் பல்வேறு மாணவர்கள் திறமையும் தகுதியும் இருந்தும் அவர்களினால் தாங்கள் விரும்பும் கற்கை நெறியை கற்க முடியாத ஓர் சூழ்நிலை இன்றும் காணப்படுகின்றது.
ஓர் வருடத்தில் குறிப்பிட்ட துறையில் இத்தனை பேருக்கு மட்டுமே வாய்ப்பு என்ற நிலைமை இலங்கையின் அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் இன்றும் காணப்படுகின்றது.
எனவே திறமை மிக்க மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் கற்றுத் தேர்வதற்கு விரும்பியோ விரும்பாமலோ தூர தேசங்களுக்கு செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் காணப்பட்டது.
எனினும் தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு குறைந்த கட்டணத்தில் இலங்கையில் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நோர்தன் யுனிவர்சிட்டியானது, SLITT எனப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்துடன் இணைந்து தரமான கற்கை நெறிகளை வழங்குகின்றது.
ஸ்லிட் எனப்படும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்கும் பட்டதாரிகள் உள்ளூரில் சுமார் 98 வீதமான தொழில்துறைகளில் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளனர். பட்ட கற்கை நெறியை பூர்த்தி செய்து மூன்று மாத கால இடைவெளியில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்ட SLITT நிறுவனம் இதுவரையில் சுமார் 30,000 பட்டதாரிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
SLITT நிறுவனத்துடன் இணைந்து நோர்தன் யுனிவர்சிட்டி இளநிலை மற்றும் முதுநிலை பட்ட கற்கை நெறிகளை சர்வதேச தரத்தில் தற்பொழுது வழங்கி வருகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த கற்கை நெறிகளை கற்க முடியும். யாழ்ப்பாணம் போன்ற கொழும்பிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நகரம் ஒன்றில் உலகத் தரம் வாய்ந்த கற்கை நெறிகள் தனியார் நிறுவனம் ஒன்றில் வழங்கப்படுவதன் மூலமாக மாணவர்கள் பெருந்தொகை பணத்தை சேமிக்க முடிகின்றது போக்குவரத்து தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான செலவுகளை இந்த மாணவர்கள் வரையறுத்துக் கொள்ள முடிகின்றது.
சில சந்தர்ப்பங்களில் நோர்தன் யுனிவர்சிட்டியினால் தற்பொழுது வழங்கப்படும் அநேகமான கற்கை நெறிகளுக்காக கடந்த காலங்களில் மாணவர்கள் வெளிநாடு சென்று கற்க நேரிட்டிருந்தது.
இதன் போது மாணவர்கள் பெருந்தொகை பணத்தை செலவிடுவதுடன், தாய் நாட்டை தொலைதூரம் செல்லவும், அவர்களின் ஆற்றல் திறன்களை வெளிநாட்டு மண்ணுக்கு தாரை வார்க்கவும் நேரிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார கல்வி என்பனவற்றின் ஊடாக பெரும் சேவையாற்றி வரும் நோர்தன் யுனிவர்சிட்டி இந்த இலங்கை சமூகத்திற்கு அளப்பரிய வரப்பிரசாதமாகவே காணப்படுகின்றது.
நோர்தன் யுனிவர்சிட்டியினால் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் உலக அளவில் கிராக்கி மிக்க துறைகளில் காணப்படும் கற்கை நெறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழங்கும் சகல வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கும் நோக்கில் இந்த நோர்தன் யுனிவர்சிட்டி நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதில் இலங்கையின் முன்னோடியாக திகழ்கின்றது.
முதன் முறையாக யாழில் உலகத்தரம் வாய்ந்த கல்வி!!
கல்வி அமைச்சின் நேரடி அனுமதி பெற்ற கணினி மற்றும் வர்த்தக பட்டப்படிப்புகளுடன்
இன்றே உங்கள் எதிர்கால வாழ்வுக்கு எம்முடன் இணைந்திடுங்கள்
Visit our website:- https://northernuni.lk/
மேலும் தகவல்களுக்கு :- 0771471471