வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டிகள்
வடக்கு மாகாணத்தின் மாவட்ட ரீதியிலான கயிறு இழுத்தல் போட்டிகள் வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்றுள்ளன.
குறித்த போட்டிகள் நேற்றைய தினம் (05.05.2024) நடாத்தப்பட்டுள்ளன.
இதன்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினை கொண்ட பல அணிகள் போட்டியில் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
பங்குபற்றிய அணிகள்
இந்நிலையில், மன்னார் (Mannar) மாவட்ட அணி குறித்த போட்டியில் பங்குபற்றி ஆண்கள் அணி மூன்றாம் இடத்தினையும், பெண்கள் அணி நான்காம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்டம் சார்பாக மன்னார் - மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான், மேற்கு கிராமத்தை சேர்ந்த வள்ளுவர் விளையாட்டு கழக வீரர்கள் எந்த வித முன்னாயத்தமும் இல்லாமல் மாவட்டம் சார்பாக பங்குபற்றி மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
அதேவேளை, மடு பிரதேச விளையாட்டு அதிகாரியின் அதிரடியான முயற்சி மற்றும் துணிச்சலான முடிவாலே இது சாத்தியமானது என குறித்த போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |