அதிபர் - ஆசிரியர் இடமாற்றங்களில் தீர்வு வேண்டும்: வடக்கு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை(Photos)
வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் இடமாற்றம் தொடர்பில் தீர்வை பெற்றுத்தருமாறு, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று (15.12.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
அதிபர் நியமனம்
புதிய அதிபர் நியமனத்தால், இதுவரை பதில் கடமை ஆற்றியவர்கள் பாதிப்புக்குள்ளகியுள்ளதாகவும், கடினமான காலப்பகுதியில் பாடசாலை சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சையூடாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
இதனால் பல வருடங்களாக பதில் கடமை புரிந்த அதிபர்கள், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏனைய மாகாணங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் பாடசாலைகளில் காணப்படும் அபாயகரமான கட்டடங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாணவர்களுக்கான போசாக்கு திட்டம், தொண்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இடமாற்றக் கொள்கை
இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பெற்றிக் நிரஞ்சன், ''பாடசாலைகளில் காணப்படும் அபாயகரமான கட்டடங்கள் தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும், ஒரு சில கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் வழங்கியுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர்,
மாகாணத்தில் உள்ள உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் தவிர , ஏனைய ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலதிகமாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கமைய இடமாற்றக் கொள்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆசிரியர் இடமாற்றத்தில் எவ்வித பாரபட்சமும் தேவையில்லை.
இடமாற்றக் கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து கல்வித்துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும், வழங்கப்படும் பணிப்புரைகளை செயற்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், மாகாண கல்விச் செயலாளருக்கு, பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
அத்துடன் மாணவர்களுக்கான போசாக்கு திட்ட முன்மொழிவுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்த உடன் அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
