முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு வட மாகாண கடற்தொழில் இணையம் எதிர்ப்பு (Video)
உணவிற்காக வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் நேற்று (07.10.2022) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உணவிற்காக வழி இல்லாத நிலையிலேயே கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவில், வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
கண்ணீர் புகை தாக்குதல்
கடற்தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியமைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
எதிர்வரும் 9ஆம் திகதி இது தொடர்பில் நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இந்நிலையில் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதவிடத்து வட மாகாணம் தழுவிய ரீதியில் கடற்தொழிலாளர் போராட்டமும் நடத்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
கடற்தொழிலாளர் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், குறிப்பாக மண்ணெண்ணெய் பிரச்சினை மோசமாக இருப்பதாகவும், வாரத்திற்கு ஒரு தடவை
மாத்திரம் 29 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
