மாற்றுத்திறனாளிகளுக்கான வட மாகாண மட்ட நடனப் போட்டி
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித் ரூ 2025” (நடனப் போட்டி) வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (17.06.2025) நடைபெற்றுள்ளது.
ஐந்து மாவட்ட குழுவினர்
ஐந்து மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த போட்டி நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
முதல் இடத்தை பெற்ற மாவட்டம்
வடமாகாண போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தினையும், இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டது.
முதலாம் இடத்தினைப்பெற்ற கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
