சட்டத்தை மீற எவருக்கும் அதிகாரம் இல்லை! நடவடிக்கை தொடரும் - வடக்கு ஆளுநர்
வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் வகையில் சட்டத்தை மீறும் ஒவ்வொரு நபரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை
வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் வகையில் செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்கள் அனைவரையும் ஆளுநர் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்.
பல சட்டவிரோத செயல்களை நாம் பார்த்திருக்கிறோம். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு நபர் மீது தாக்குதல், சாலையில் இரு குழுக்களிடையே மோதல், தற்போது நீதிமன்றத்தில் உள்ள தனியார் நிலத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைதல், மற்றும் அத்துமீறி நுழைதல், மற்றும் அரசு நிலத்தில் ஊழியர்கள், பேருந்து மீது கல்லெறிதல் ஆகியவை அடங்கும்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்து வரும் நிலையில் வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபருடனும் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கும் சட்டவிரோத
செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் யாருக்கும் இடம் வழங்க முடியாது என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
