நான்காவது நாளாகவும் தொடரும் வட மாகாண அரச சாரதிகளின் போராட்டம்
வட மாகாண அரசு சாரதிகள் சங்கம் தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த தொடர் போராட்டமானது, இன்று (06.06 .2024) யாழ்ப்பாணம்(Jaffna) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதி பிரதம செயலாளரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம்
எனினும், ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய அந்த இடமாற்றம் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த அரச சாரதிகள், கடந்த பெப்ரவரி மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இடை நிறுத்தப்பட்ட இடமாற்றம், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பிரதமர் செயலாளர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இருப்பினும், குறித்த திகதி வரை இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அரச சாரதிகள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |